பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரைவின் மகளிர்

247



பொருட் செல்வத்தையே பொருளாகக் கருதும் பொதுமகளிரின் புன்மையான இன்பத்தை, அருட் செல்வத்தையே பொருளாகக் கொண்டு ஆராயும் அறிவுடையார் அனுபவிக்க எண்ண மாட்டார்.

பொது மகளிரை விரும்புபவர் பொருட் செல்வத்தோடு அருட் செல்வத்தையும் இழப்பர் என்பது கருத்து.

பொருட் பொருளார்-பொருள் ஒன்றையே பொருளாக எண்ணும் பொருட் பெண்டிர்; புன்னலம்-அற்பமான சிற்றின்பம்; தோயார்-அனுபவிக்க எண்ணார்; அருட் பொருள் - அருள் என்னும் உயரிய பொருள். 914

5.பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.

இயற்கையான நல்லறிவோடு மாட்சிமைப்பட்ட கல்வி அறிவையும் உடையவர், பொதுவாக எல்லாருக்கும் இன்பம் தரும் பொதுமகளிரின் புன்மையான நலத்தினில் திளைக்க மாட்டார்.

பொது நலத்தார்-பொது மகளிர்; மதிநலம்-இயற்கை அறிவு . 915

6.தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.

ஆடல், பாடல், அழகு முதலிய தகுதிகளால் செருக்குற்றிச் சிற்றின்பத்தை யாவருக்கும் விலைக்கு விற்கும் தொழிலைப் பரப்பும் பொதுமகளிர் தோளினை நல்லொமுக்கத்தைப் போற்றும் அறிஞர்கள் தழுவ மாட்டார்கள்.

தந்நலம்-தங்கள் நல்லொழுக்கம்; பாரிப்பர்-போற்றிப் பாதுகாப்போர், பரப்புவோர்; தோயார்-தழுவமாட்டார்; தகை-தன்மை: பாரிப்பார் தோள்- தம் எண்ணத்தை எங்கும் பரப்பும் பொருட் பெண்டிர் தோள். 916

7.நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்

பேணிப் புணர்பவர் தோள்.

மனத்தை நிலைநிறுத்தி அடக்கி ஆளும் ஆற்றல் இல்லாதவர் அன்பு நீங்கலாகப் பிறவற்றின் மேல் ஆசை வைத்துத்