பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடக்கமுடைமை

33


5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பிறரிடத்துப் பணிவாக நடந்து கொள்ளுதல் பணக்காார், ஏழை முதலிய எல்லார்க்கும் நன்மையே தருவது, ஆனாலும் இந்தப் பணிவாக நடந்து கொள்ளும் குணம் செல்வமுடையவர்க்கே மேலும் ஒரு செல்வமாக இருக்கும் சிறப்பினை உடையது. 125

6.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஆமை துன்பம் நேராமல் தன் தலை,கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அது போல், ஒருவன் ஒரு பிறப்பிலே தன் ஐம்பொறிகளையும் பாவம் நேராமல் அடக்கத் தக்க வல்லமையுடையவனாக இருந்தால், அவ்வல்லமை அவனுக்கு ஏழு பிறப்புக்களிலேயும் உறுதியை அளிக்கும்.

ஒருமை-ஒரு பிறப்பு; எழுமை- ஏழு பிறப்பு; ஐந்து-ஐம்பொறிகள்; ஆற்றின்-வல்லவன் ஆயின்; ஏமாப்பு-உறுதி, பாதுகாப்பு. 126

7.யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டிய பலவற்றையும் காத்துக் கொள்ளா விட்டாலும் நாவினால் வரும் குற்றத்தினையேனும் காத்து, நாவடக்கம் கொள்ளல் வேண்டும். ஒருவர் தம் நாவினைக் காக்கத் தவறுவாரானால், அவர் சொற்குற்றத்திற்கு உள்ளாகித் துன்புறுவர்.

யா- எவற்றை; சோகாப்பர்- துன்புறுவர்; இழுக்கு- குற்றம். 127

8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

நல்ல சொற்களையே சொல்லும் பழக்கமுடைய ஒருவன் எப்போதேனும் ஒரே ஒரு தீமையான சொல் சொல்லுவானே யானாலும், அந்தத் தீமையான சொல்லினது பொருளின் பயனால், அவன் அதற்கு முன்பு சொல்லிய நல்ல