பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

திருக்குறள்


3.இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.

'நீ கேட்கும் பொருள் என்னிடத்தில் இல்லையே’ என்று தன் துன்ப நிலையைத் தெரிவிக்காமல் இருந்தாலும், எங்ஙனமேனும் கொடுத்துதவுங் குணமும் நல்ல குடும்பத்தில் பிறந்தானிடத்தில் உள்ள குணங்கள் ஆகும்.

'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்குக் கொடுத்துதவும் குணம் என்றும் பொருள் கூறலாம். எவ்வம் - துன்ப நிலை; குலனுடையான் - நல்ல குடும்பத்தில் பிறந்தவன். 223

4.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

நம்மிடம் வந்து ஒன்றைக் கேட்கும் ஒருவர், அப்பொருளைப் பெற்று இன்புறும் வரையிலும் நாம் அவருடைய நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டியிருத்தலால் அது நமக்குத் துன்பத்தையே தருகின்றது. 224

5.ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பசித் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் வல்லமையே தவம் செய்வோரின் வல்லமையாகும். அவ்விதம் பசியாக இருப்போர்க்கு உணவையளித்து, அவர்தம் பசியை நீக்குகின்றவர் பசியை அடக்கும் வித்தையில் வல்ல தவசியினும் சிறந்தவர் ஆவர்.

பிறர் பசியை ஆற்றுகின்றவர் தம் பசியை ஆற்றிக் கொள்ளும் தவ முனிவரினும் சிறந்தவர் ஆவர் என்பது கருத்து. ஆற்றுவார்-தவம் செய்பவர்; ஆற்றல்-வல்லமை. 225

6.அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

வறியவர்களின் கொடிய பசியைப் பொருள் பெற்றவன் தீர்த்தல் வேண்டும். அவ்விதம் பசி தீர்த்தல், பொருளைப்