பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 திருக்குறள் வையாமலெல்லாச் சீவன்கள் பேரிலேயும் சுபாவமா யுண்டாகிய கருணை. அது இல்லறத்திற்கு அன்புடைமை போலத் துறவறத் திற்கு அருளுடைமை பெரியதாதலால் முன்னே சொல்லப்பட் _து. 2 of 1. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள என்பது செல்வங்களுக் கெல்லாம் தேடி எடுக்கப்பட்ட செல்வம் அருட் செல்வ மாகிய தயையே, அஃதல்லாத பொருட்களால் வரும் செல்வம் நீசரிடத்திலேயும் உண்டு என்றவாறு. அருட் செல்வமாவது, சகல சீவன்களிடத்திலேயும் தயை யுண்டாயிருக்கிறது. அதுவும் பெரியவர்களிடத்திலே யுண்டாம் பொருட் செவ்வம் சிறந்த தல்ல என்றவாறு. அ 242. நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினு மஃதே துணை என்பது நல்ல வகையாலே தயையைத் தேடிக் கொள்ள வேண்டும்; பற்பல விதங்களாலே ஆராய்ந்து பார்த்தாலும் அந்த அருளென் கிற தயையே துணை என்றவாறு. இம்மை மறுமையினும் உயிரை விட்டு நீங்காத படியினாலே துணை யென்பது. 모L 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் என்பது தயையுடனே கூடியிருக்கிற நெஞ்சை யுடையவர்கள் இருளா யிருக்கப்பட்ட பொல்லாத நரகத்திலே போற'தில்லை யென்ற வாறு. /H__ 1. போகிற