பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 143 276. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கனா ரில் என்பது மனதிலே ஆசை அறாமல் வைத்துக்கொண்டு துறந்த சன்னாசி யைப் போலத் தானம் கொடுக்கிறவர்களை வஞ்சித்துப் பிழைக் கிறவர்களைப் போலக் கடின சித்தர் உலகத்திலே இல்லை என்றவாறு. தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, கொடுக்கிறவர்கள் இத்தபசிக்கு ஆஹாரம் அவுஷதம் முதலானவைகளைக் கொடுத்து மறுமையிலே தேவர்களாக வேணும் என்கிறவர் களைத் தாங்கள் அனாசாரம் பண்ணுகிறதினாலே இழிகுலத்தின ராக்குதல் என்பதாம். தமக்கு நல்லது செய்கிறவர்களுக்கு ஆகாத காரியத்தை உண்டாக்குகிறதினாலே கடின சித்தர் என்பதா யிற்று. அன் 277. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து என்பது குன்றிமணியின் மேலேயிருப்பது போலே சிவப்பாய் நல்ல வேஷத்தைத் தரித்தாலும், குன்றிமணியின் அடியிலே கருத் திருக்கிறாப்போலே மனதிலே கபடமா யிருக்கிற பேர்களும் உண்டென்றவாறு. & T 278. மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் என்பது மனத்திலே கபடத்தை வைத்துக் கொண்டு தபவேஷத்தைப் போட்டுக் கொண்டு பிறர் தன்னை மதிக்கத் தக்கதாக நீரிலே முழுகிக் காட்டிக் கள்ளாசாரம் செய்கிறவர்கள் உலகத்திலே பல பேர்கள் என்றவாறு. மனது கபட மாகிறது காம வெகுளி மயக்கம். اہلئے == 1. அவிழ்தம் என்பது அச்சுநூல்