பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.4 திருக்குறள் 432. இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு என்பது தன்னை வந்து கேட்ட பேர்களுக்குக் கொடாமல் இல்ல்ை யென்கிறதும், நல்ல காரியங்களை விட்டுவிடுகிற அபிமானமும், மட்டுமிதமில்லாத சந்தோஷமும் இந்த மூன்று குணமும் ராசாக்களுக்குக் குற்றமென்றவாறு. நல்ல காரியங்களை விட்டு விடுகிற அபிமானமாவது, பிராமணர் அறிவாலுயர்ந்த பெரியோர் நல்ல தவசிகளை யுடையவர்கள் தனக்கு மூத்த பேர்கள் தகப்பன் தாய் இவர்களை வணங்காமலும், தங்களால் முடிப்பியாத காரியங்களை நாம் நினைத்தது முடியாது விடப்போகாதென்று கெட்டியாய் முடிப்பிக்கிறது.மாம். இந்த இரண்டு பாட்டாலுங் குற்றங்களிது வென்று சொல்லப்பட்டது. *_ 433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் என்பது பழியை யஞ்சி நடக்கிற பெரியோர்களிடத்திற்றினை யத்தனை குற்றம் வந்த தாயினும் அதனை ஒரு பனையத்தனை யாக வெண்ணுவ ரென்றவாறு. உயர்ந்த சாதியாகிய பெரியோர்க்குக் குற்றம் பொறுக்கப் போகாதாயினும் தினையத்தனை என்று பொறார்; அந்தக் குற்றத்தைப் பனையத்தனையாகக் கொண்டு வருந்திப் பின் அது வாராமற் காத்துக் கொள்வ ரென்பதாம். MH_ 434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தரூஉம் பகை என்பது 1. இது - இவை