பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 205 ஒருவனுக்குப் பொல்லாங்கு பண்ணுகிறது பகையாகிற குற்றமேயாகலான், அந்தக் குற்றம் தன்னிடத்திலொருக்காலும்' வராமற் காத்துத் திரிகிறதே பலனென்றவாறு. இம்மை மறுமைக்குப் பொல்லாப்பைத் தருகிற படியினாலே, அந்தக் குற்றம் வராமற் காக்கிறதே நல்லவர் தொழிலென்ப தாம். அ 435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரி முன்னர் வைத்துறு போலக் கெடும் என்பது ராசாவானவன், தனக்கொரு குற்றம் வருவதை முன்னே யறிந்து, அது வராமற் பரிகரிக்க வேணும்; அப்படிப் பரிகரியாதவ னரசு, நெருப்பு எதிராக விருந்த வைக்கோற்போர் போல் அழிந்துவிடு மென்றவாறு. குற்ற மிகச்சிறிதானாலும் வரத்தக்க காலமறிந்து காரா மற்’ போனால் அதனாற் பெரிய செல்வ மழிந்துவிடுமென்பதாம். டு 436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு என்பது முன்னே தனக்கு வரக்கடவ குற்றங்களைக் கண்டு பரிகரித்துப் பின்பு பிறர்க்கு வருங் குற்றங்களைக் காணவல்ல அரசனுக்கு இம்மை மறுமைக்குங் குற்றமே யில்லை யென்ற வாறு . குற்றங்களைப் பார்த்துப் பரிகரிக்க வல்ல அரசனே முறை கேட்டற் குரித்தானவன் என்பதாம். சின் 437. செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ான்பது 1. ஒருகாலும் 2. காக்காமல்