பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருக்குறள் உயர்ந்த குடியிலே பிறந்து குற்றத்தினிங்கி நமக்குக் குற்றம் வரப் போகுது என்று பயப்பட்டு நடக்கிறவனையே தெளிக என்றவாறு. குற்றங்களாவன, பொய் களவுகாமம். நாணாவது, இழிவான தொழில்களைச் செய்ய நினையாமலிருக்கிறது. * 5.03. அரியகற் னாசற்றார் கண்ணும் தெளியுங்கால் இன்கை யரிதே வெளிறு என்பது கற்கவேண்டிய நூல்களைக் கற்றுக் குற்றங்க ளில்லாதவர்களிடத் திலே நன்றாக வாராயுமிடத்து அறிவில்லாமல் இருக்குறது) அரிதென்றவாறு. அறிவுள்ளவர்களையே தெளிகவென்பதாம். /HL 5.04. குணனாடிக்’ குற்ற மும் நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்பது ஒரு குணங்களு மில்லாத வர்கள் லோகத்திலே யில்லை; ஒரு குற்றமுமில்லாதவர்களுமில்லை; ஆனபடியினாலே ஒருவன்குணங் களையும் குற்றங்களையும் ஆராய்ந்து குணமதிகமாயிருந்தாற் றெ ளிக வென்றவாறு. குற்றமுடையவனை நம்பவொண்ணாதென்பது. Io 505. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் என்பது பிறப்பு குணம் அறிவு என்பனவற்றால் மனுஷர்களெய்தும் பெருமைக்கும் சிறுமைக்கும் அவர்கள் செய்கிற காரியங்களே யல்லாமல் வேறொன்றில்லை யென்றவாறு. 1. போகிறது 1. இருக்கிறது 2 குணநாடி என்பது பிறர்கொண்ட பாடம்