பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 25 & மேலே வரப் போறத்தை எண்ணாமல் முறைமை தப்பச் செய்த ராசா, அந்த அநியாயத்தினாலே முன் தேடின பொருளையு மிழந்து. பின் பொருளைக் கொடுக்கப்பட்ட" குடிகளையு மிழந்து விடுமென்றவாறு. முன்தேடின பொருளை இழக்குறத்துக்குக் காரணம் மேல் வருங் கவியிற் சொல்லுகுறோம்". அF 555. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணிரன்றெ செல்வத்தைத் தேய்க்கும் படை என்பது அரசன் முறை செய்யாத படியினாலே குடிகள் துக்கப்பட்டு அந்தத் துக்கத்தைப் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணிர், கொடுங் கோலனாகிய மன்னவன் செல்வத்தைக் கெடுக்கிற ஆயுதமா மென்றவாறு. ஆயுதத்தைப் பார்க்கிலும், துக்கப்பட்டழுத கண்ணிர் கொடிய தாகையினால், செல்வங் கடிதில் தேய்ந்துபோ மென்ற வாறு, டு 556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல் மன்னாவா மன்னர்க் கொளி என்பது ராசாக்களுக்குக் கீர்த்தி யுண்டாகிறது, செங்கோன் முறைமை யாலே யாம்; அந்தச் செங்கோல் முறைமை யில்லாவிட்டால், அந்த ராசாவுக்குக் கீர்த்தி யுண்டாகா தென்றவாறு. கொடுங்கோலனானால் அபகீர்த்தி வருமென்பதாம். 557. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு என்பது மழையில்லா விட்டாற் பூமியிலே யிருக்கிற சீவன்களுக்கு எத்தனைத் துக்க முண்டோ அத்தனைத் துக்கு முண்டாம், 1. போகிறதை 2. கொடுக்கும் 3. இமுக்கிறதற்கு 4. சொல்லுகிறோம் 5. பழி