பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 259 அந்தக் கூட்டத்தைச் சுமந்து கொண்டிருக்கிற பூமிக்கு வெகு பாரமென்றவாறு. கடுங்கோலனாவது மிக்க தெண்டனை யாலென்பது தனக் கிசைந்தாரையல்லது கூட்டாமையா லவர்களைச் சுமக்கிறது வெகு பாரமாயிற்று. ஆக அதிகாரம் டுல் க்குக்குறள் டுளஎல் இபபால் 58. கண்ணோட்டம் என்பது , தன்னுடனே சினேகம் பண்ணின பேர் சொன்ன காரியங்களை மறுக்க மாட்டாமை, இது அவர்கள் மேற் கண் ணோட்டமாகிய தயை யுண்டான படியினாலே கண்ணோட்ட 571. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யு ன்மையா னுண்டிவ் வுலகு என்பது கண்ணோட்ட மென்று சொல்லப்படுகின்ற தயை அரசரிடத் திலே’ யுண்டான படியினாலே யிந்த வுலகஞ் சுகமாயிருக் கின்ற தென்றவாறு. அரசர் தயை யில்லாவிட்டால் லோகத்துக்குச் சுகமில்லை யென்றவாறு. க 572. கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை என்பது உலகவியற்கை கண்ணோட்டத்தினாலே யுண்டாம்: அந்தக் கண்ணோட்ட மில்லாதவர்க ளுண்டாகிறது பூமிக்குப் பார மென்றவாறு. 1. கடுங்கோல் என்பது மிக்க தண்டனை - அச்சுநூலிற்கண்டது. 1 . ஆசாரியரிடத்திலே என்று காகிதச் சுவடியிலுள்ளது.