பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 திருக்குறள் 611. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் என்பது தன்சிறுமையை நோக்கி நாமிந்தக் காரியத்தை முடிக்கிறது அருமை என்று நினைச்சு விசாரப்படாமலிருக்க வேணும்: அந்தக் காரியத்துக் கேற்ற பெருமையே தமக்கு முயற்சி யுண்டாக்கு மென்றவாறு. ஒரு காரியஞ் செய்ய வேண்டின் அத்தை" விடாது முயலவே தாம் பெரியராவர்; பெரிய ரானால் அரிதான காரியங்களும் எளிதின் முடியுமென்றவாறு. 612. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு என்பது காரிய மாகிய வினைக்குறையைச் செய்யாது விட்டாரை உலகமும் விடும்; அதனாற் செய்யப்பட்ட காரியங்களை விடாமற் செய்ய வேண்டு மென்றவாறு. வினைக்குறையாவது, தாம் வாழ் நாள் குறைபடாமல் நிற்கும் வண்ணம் புண்ணியத்தைச் செய்தல் என்பதாம். 2_ 613. தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு என்பது முயற்சியென்று சொல்லப்படுகின்ற வுயர்ந்த குணத்தின் கண்ணே நின்றது, எல்லார்க்கும் உபகாரஞ் செய்தலென்னும் மேம்பா டென்றவாறு. பொருளுடையவர்கள் பிறருக் குபகாரஞ் செய்தால் முயற்சி யுடையா ரென்பார் மேம்பாடென்றார். |FL 1. நினைத்து 2. அதனை 3. செய்யப்படும்