பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருக்குறள் கெட்டியாய்ச் சொல்லுகிறது, எல்லார்க்கு மெளிதாயிருக்கும்: சொன்ன காரியத்தை யந்தப்படியே செய்து முடிக்கிறது. எல்லார்க்கு மருமையா மென்றவாறு. டு 665. விறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ணுறெய்தி யுள்ளப் படும் என்பது எண்ணிக்கையாலே கெட்டிக்காரனாய் மற்று முள்ள லட்சணங்களாலே குறையில்லாதவன், செய்யப்பட்ட குற்ற மில்லாத காரியம், அரசனாலே சந்தோஷப்பட்டு எந்நாளும் நினைக்கப்படு மென்றவாறு. அரசன் நினைத்தால் செய்தவனுக்குப் பெரிய செல்வம் வந்தெய்து மென்பதாம். டு 666. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்பது தாங்கள் நினைத்தபடியே யெல்லாக் காரியத்தையுஞ் செய்து முடித்து அந்தப்பலத்தை யடைவார்கள். நினைத்தவர் கள் கெட்டிமனசை யடையரானா லென்றவாறு. அச 667. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து என்பது ஒடுகிற பெரிய தேருக்குக் கடையாணி போலக் காரியத்திலே சமர்த்தனானவன் உருவு கொஞ்சமா யிருந்தாலும் அவ னுருவைக்கண் டிகழ வேண் டா மென்றவாறு. அச்சினுடைய ஆணி சிறிதாயிருந்தும் பெரிதாயிருக்கிற தேரினுடைய வண்டியைச் சுழல வொட்டாமல் நிறுத்துகிறாப் போலே", உருவு கொஞ்சமாயிருந்தாலும் மனசு திடமுள்ளவன் பெரியதான காரியங்களைச் செய்து முடிப்பனென்பதாம். GT Ho 1. எண்ணத்தால் 2. நிறுத்துகிறாற்போலே