பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.42 திருக்குறள் குற்றமற்றவர்கள் நட்பு இம்மையிலே கீர்த்தியும், மறுமை யிலே புண்ணியமு முண்டாக்கும்; அறிவில்லாதாருடைய சினேகம் துக்கத்தைப் பண்ணிவிக்குற படியினாலே விடவேணு மென்பதாம். ίD ஆக அதிகாரம் அயக்குக்குறள் அள இப்பால் 81. பழமை என்பது. சினேகிதருடைய பழமையினாலே யவர்கள் செய்த பிழைகளைப் பொறுத்தலாம். 8.01. பழமை யெனப்படுவதி யாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு என்பது பழமை யென்று சொல்லப்பட்டது ஏது என்றால், ஒருவ அக்குச் செய்ய வேண்டின காரியத்தைச் சற்றுங் குறைபடா மற் செய்ய வுடன்படுகிற நட்பு என்றவாறு. செய்ய வேண்டினதாவது, சினேகிதனுக்கு வேண்டியதைத் தானே செய்தலும், அவன் பொருளைத் தன் பொருளாகவே பார்க்கிறதும், வணக்கமும் பயமுமில்லாமலிருக்கிறது.மாம். அவர் கள் செய்த குற்றத்தைப் பொறுக்கிறது. இது முதலானது பழமை யென்று சொல்லப்படும்." அ 802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன் என்பது சினேகிதத்துக்கு அவயவமாவது சினேகிதருக்கு உரிமை" 1. பண்ணுவிக்கிற 2. சொல்லப்படுவதுயாது 3. வேண்டிய காரி யத்தை 4. இவ்வாக்கியம் அச்சுநூலில் இல்லை 5. ஒருமை என்பது காகிதச் சுவடி