பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

33

என்று கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் வற்புறுத்தியமை திருவள்ளுவரின் ஜைநசமயக் கோட்பாட்டை வலியுறுத்தும்.

“தேவர் குறளும்” என்றதனுள் திருவள்ளுவர் தேவர் எனப்பட்டார். தேவர் என்பது சைன முனிவர்களைக் குறிக்கும் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்; சூளாமணி ஆசிரியர், தோலா மொழித்தேவர்; திருக்கலம்பக ஆசிரியர் - உதீசித்தேவர். எனவே திருக்குறள் ஆசிரியர் ஜைந முனிவராதல் தெளிவு.

நச்சினார்க்கினியர் திருக்குறள் ஆசிரியரைத் தேவரென்றே குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி 1891 ஆம் செய்யுள் உரையில் “நன்னார், அழுதகண்ணிரும் அனைத்து என்றார் தேவரும்” என்றுள்ளது. மேலும் 1927-1928 ஆகிய செய்யுட்களின் உரையில், “பகல் வெல்லும் கூகையைக் காக்கை” என்றும், “காலாழ்களரின் நரியடும்” என்றும் தேவரும் கூறினார் என்றமை காணப்படுகின்றது. இதனால் திருக்குறள் ஆசிரியரைத் “தேவர்” என்றல் அந்நாள் மரபென்றும், தேவர் என்பது ஒரு ஜைந முனிவர் என்றும் கொள்ள இடம்தருகிறது.

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று ‘நீலகேசி’ யென்பது. இதற்கு வாமன முனிவர் என்பார். ‘சமயதிவாகரம்’ என்ற ஓருரை எழுதியுள்ளார். இவர் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ள இடங்களில் திருக்குறளை ‘எம் ஓத்து’ என்று கூறியுள்ளார்.

“.....வெயினிலை முதலாயினவும் வநசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை.

“உற்ற நோய், நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு”

என்பது எம்மோத்தாகலின் (353) ஆம் செய்யுளுரை).