பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 திருக்குறள் தனக்கு உற்றார்போல இருந்து மனதிலே யுறவில்லாதா ருடைய சினேகம், பூரீசெனங்கள் மனது போலத் தமக்கான இடம் பெற்றால் வேறுபடு மென்றவாறு. மனம் வேறுபடுதலாவது, பழைய பகையை முடிக்க வேண்டி யென்பதாம். 30 823. பலநல்ல கற்றக் கடைத்து மன நல்ல ராகுதல் மானார்க் கரிது என்பது நல்லதா யிருக்கிற பல நூல்களைக் கற்ற விடத்தும் அதனாலே மனசு திரும்பிச் சினேகமாகிறது பகைவர்களுக் கில்லை யென்றவாறு. நல்ல நூலாகிறது' மனது குற்றந்தீர்க்கிறது' மனது நல்ல ராகிறது" கோபம் விடுகிறது. மனதிலே பகையாயிருக்கிற வர்களைக் கல்வியுடையவர்களென்று சினேகம் பண்ணலா கா தென்பது. Hi 824. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும் என்பது கண்டவிடத்து" முகத்துக்கு நல்லவனாகச் சிரித்து மனதிலே பகையாயிருக்கிற வஞ்சகரைக் கண்டால் பயப்படவேணு மென்றவாறு. மனதிலே யிருக்கிற பகையைப் புறத்து வெளிப்படுத்தாமை யானும், மனதிலே யிருக்கிற குறிப்பையறிவிக்கிற முகத்தாலேயும் தெரியாமல் மறைக்கப்பட்ட வஞ்சருக்குப் பயப்பட வேணு மென்பதாம். ته 1. நட்பு - அச்சுநூல் *முதல் * வரை; பகையேயாதல்-அச்சுநூல் 2. நல்லனவாய; 3. நூலாவன: 4. தீர்ப்பன: 5. நல்லதாகிறது. அச்சு நூல் 6. கண்டபொழுது 7. தோன் யா மையானும் 8. மறைக்கும்-அச்சுநூல்