பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

திருக்குறள்

யும் தமிழில் பாடினார்” என்று கூறியிருப்பதால், இந் நூலாசிரியர் அந்நான்கு பற்றியும் தம்முடைய கருத்துக்களைப் பிறமொழியிலும் கூறியுள்ளார் என்றும் அவற்றை அப்பிற மொழியில் கற்றுணரமாட்டாதவர்க்குத் தமிழில் எழுதினார் என்றும் கொள்ளக் கிடக்கிறது. இங்ஙனம் கொள்ளாக்கால் “தண்டமிழில்” உரைத்தார் - “ஏனோர்க்கு” உரைத்தார் என்று கூறுவது செறிவுடைய கருத்தாகாது. எனவே குறளாசிரியர் அறமுதலா அந்நான்கு பொருள்கள் பற்றித் தமிழல்லாத பிறமொழியிலும் எழுதினார் ஆதல் வேண்டும். எனவே ஜைநருடைய கொள்கைக்கு ஏற்பக் குறள் ஏலாசாரியரால் தமிழில் எழுதப்பட்டிருத்தல் கூடும் என்றும், அவ்வேலா சாரியராகிய ஶ்ரீ குந்த குந்தர் பிராகிருதத்தில் “ப்ரப்ருத்ரயம்” எனப்படும் பஞ்சாஸ்திகாயம், ப்ரவசனஸாரம், ஸமயஸாரம் என்றும் மூன்று நூல்கள் எழுதினார் என்பதும் கொள்ளப்படும். “தானே முழுதுணர்ந்து” என்று கூறியமைக்கு ஏற்ப ஶ்ரீ குந்த குந்தரும் “கலிகாலசர்வக்ஞர்” எனப்பெற்றார் என்பது அறியப்பெறும்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோன்மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்செனப - இப்பக்கம்
மாதானு பங்கி மனுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு!

என்பது நல்கூர் வேள்வியார் பாடிய பாடலாகும்

உபகேசியின் தோள் மணந்தவன் உத்தர மதுரையில் சிறந்தோன் ஆயினான். அங்ங்னமே இப்பக்கம் மாதாநுபங்கி எனப்படுகிற குற்றமற்ற அறிவுடைய செந்நாப் போதார் தென் மதுரைக்கு அச்சாணியாவார் என்பது இப்பாடலின் பொருள்.

“மாதாநுபங்கி” என்ற தொடருக்குப் பேரா. அ. சக்கரவர்த்தி சிறந்த ஆய்வுரை தருகிறார். இத்தொடர் மாதா, அநு, பங்கி என்ற மூன்று சொற்களால் ஆயது. இதில் அநு என்பது சைன சமயக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு முன் ஒட்டு. ஜைநாகமங்கள் நான்கு அவை பிரதாமாநு யோகம், கரணாநு யோகம், சரணாநு யோகம், திரவ்யாநு யோகம் என்பனவாம். அநு யோகம் என்பதில் அநு என்ற முன் ஒட்டு ஜைநசம்பிர