பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 & 5 கொடுக்கிற கண் போலச் சிறந்தவர்களிடத்திலேயும் இரவாமலிருக்கிறது இரந்து கொண்டு செல்வ மெய்துகிறத் திலுங் கோடி நன்மை யென்றவாறு. ஆதி 1062. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து. கெடுக ஷ லகியற்றி யான்' என்பது இந்த வுலகத்தைப் படைத்தவன், இதிலே பிறக்கிற சிவன் களுக்குச் செல்வத்துடனே வாழ விதியாமல், இரந்து பிழைக்க என்று படைத்தானானால், அவனும் இரக்கிறவர்களைப் போலே யெங்கும் இரந்து திரிந்து கெட்டுப் போக வேணு மென்றவாறு. சீவன்களுக் கெல்லாம் ஆயிசும் வேண்டிய வுண்டியும் அதற் கேற்ற தொழிலும் பழவினை வசத்தினாலேt வருகிறது: அப்படியல்ல ஒருவன் படைத்தானென்றால்,t சிலபேர்க்கு இரக்கிற தொழிலைக் கற்பித்த படியினாலே. அவனும் இரந்து கெடுவனென்பதாம். செய்தது அனுபவிக்க வேணும் என்கிற ஞாயத்தினாலே இரப்பைப் படைத்தவனும் கெடவேணும். உதாரணம் முற்பகை செய்யின் பிற்பகை விளையுமென்பது. 2 1063. இன்மை யிடும்பை யிரந்துதிர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில் என்பது தரித்திரத்தினாலே வந்த துக்கத்தை முயற்சியாலே நீக்கக் கடவோம் என்று நினையாமல் இரந்துண்டு நீக்கக் கடவோம் என்று நினைக்கிற கெட்டி வலுமையைப் போல் வேறு வலுமை யில்லை யென்றவாறு.

  • முதல் வரை அச்சு நூல் 1. அடைகிறதிலுங் - அச்சுநூல். tமுதல்

tவரை; கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்குமன்றே அவற்றுள் - அச்சு நூல் (பரிமேலழகருரை) *முதல் "வரை: அச்சுநூலிற்கண்டது (பரிமேலழகருரை)