பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



458

திருக்குறள்

யினாலே தனக்குச் சரியில்லை என்று இறுமாந்து ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்றவாறு.

1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை

என்பது பகற்குறிக்கண் பூவணிகண்டு சொல்லியது

இந்த ஸ்திரீ தன்மென்மையை அறியாது, அனிச்சப்பூவைக் காம்பினடியைக் களையாமல் முடித்தாள்: இனி இவளிடைக்கு நல்ல பறைகள் ஒலியா[1] என்றவாறு.

அனிச்சப் பூவினுடைய காம்பின் அடிச்சுமையைப் பொறாமல் இடை முரியும்; முறிந்தால் அதற்குயான் ஏதுசெய்வேன் என்று விசாரப்பட்டான் என்பதாம்.

1116. மதியு மடந்தை முகனு மறியா

பதியிற் கலங்கிய மீன்

என்பது இரவுக் குறிக்கண் சந்திரனைக் கண்டு சொல்லியது.

ஆகாசத்திலே இருக்கிற மீன்கள். தங்களுக்குப் பதியாயிருக்கிற சந்திரனையும் என்னுடைய ஸ்திரீ முகத்தினையும், இது சந்திரன் இதுமுகம் என்று அறிய மாட்டாமல் தங்கள் நிலையினைவிட்டுக் கலங்கித் திரிகின்றன என்றவாறு.

சந்திரனைப் போலே உள்ளது முகம் என்பதாம்.

1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து

என்பது இதுவுமது

அந்த மீன்கள் அப்படிக் கலங்குகிறதற்குக் காரணம் யாது? முன் குறைந்த கலை நிரம்பியே விளங்குஞ் சந்திரனுக்குள்ள மறுப்போல, ஸ்திரீ முகத்திலே மறு உண்டோ என்றவாறு.


  1. தீய பறை ஒலிக்கும்; செத்தார்க்குரிய நெய்தற்பறை ஒலிக்கும் என்க.