பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

471

பலரும் விசாரப்படப் பிரிந்தவரை மறத்தல் கூடாதென்பதாம்.

1150, தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை யெடுக்குமிவ் வூர்

என்பது

நாயகனுடனே கூடப் போகிறதற்குக் காரணமாய் நாம் பண்டே விரும்புவதாய அலரைச் சொல்லுகிறார்: இனி நாம் அவரை விரும்பினால் அதற்கு உடன் படுவார்; ஆகையால் இவ்வலர் நமக்கு நன்றாயிற்று என்றவாறு.

இந்த இருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்

ஆக அதிகாரம் ள௧௫க்குக் குறள் சதள௫௰

இப்பால் கற்பியல்:

(முதற்கண் 116. பிரிவாற்றாமை*)

என்பது, தலைமகன் பிரிந்து போதற்குத் தலைவி ஆற்றாளாந் தன்மை.

1151. செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை

என்பது

நீ என்னைப் பிரியாமல் இருக்கிற வார்த்தை யுண்டானால் அதை எனக்குச் சொல்! அதல்லாமல் நீ பிரிந்து போய் விரைந்து வருகிறதானால், அந்த வார்த்தையைப் பிரிந்த பிறகும் பிராணனுடனே இருக்கிற பேருக்குச் சொல் என்றவாறு.

நாயகனைப் பிரிந்தவுடனே உயிர் போகிறது உத்தமமான கற்பு: பிரிந்தபின்னும் பிராணனிருக்கிறது மத்திமான கற்பு என்பதாம்.


*தொடர்புபற்றி பதிப்பாசிரியர் சேர்த்தது.