பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

473

1155. ஓம்பி னமந்தார் பிரிவோம்பன் மற்றவர்

நீங்கி னரிதாற் புணர்வு

என்பது

என்னுயிரைக் கொல்லாமற் காத்தியாயின் என்னுயிரை ஆள அமைந்தவருடைய பிரிவை நிறுத்துவாயாக, அப்படி நிறுத்துவார் இல்லாமல் அவர் பிரிந்து போனால், என்னுயிரும் போய்விடும்; உயிர் போனால் பிறகு நாயகனைக் கூடுகிறதருமையாம் என்றவாறு.

ஆளுதற்கமைதல், எனக்கு இறைவராயிருத்தல்.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்

நல்குவ ரென்னு நசை

என்பது, தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லுகிறது:

நம்முடைய விரகவாசை மிகுதி அறிந்த தலைவர் தாமே நம் முன்னே நின்று தம்முடைய பிரிவினைச் சொல்லுவரானால், இப்படிப்பட்ட கெட்டி மனதுடையவர் பிறகு நம்முடைய ஆற்றாமை அறிந்து வந்து நம்மைச் சேருவர் என்னும் ஆசை விட்டுப்போ மென்றவாறு.

இப்போது விட்டுப் போகிறவர் திரும்பி வந்து நம்மைச் சேருகிறது எங்கே என்பதாம்.

1157. துறைவன் துறந்தமை துற்றாகொன் முன்கை

இறையிறவா நின்ற வளை

என்பது+

நாயகன் என்னை விட்டுப் பிரியப் போகிறதை அவன் எனக்குச் சொல்லாத முன்னே என் முன்கையிலே நின்று


*கவவுக்கடுமை என்பர் பரிமேலழகர். +இங்கிருந்து பரிமேலழகர் தந்த துறை விளக்கம் 1160ஆம் குறள் வரை கொடுக்கப்பட வில்லை.