பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



496

திருக்குறள்

என்றவாறு.

1222. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்

வன்கண்ண தோநின் றுணை

என்பது

மயங்கின மாலைப்பொழுதே! நீயு மெம்மைப்போல வாடின கண்களையுடையையா யிருந்தாய்: நின் காதலரும் என் காதலர் போல் வன்கண்ணரோ என்றவாறு.

மயங்குகிறதாவது, பகலும் இரவும் தம்முள் விரவியிருத்தலாம். கலங்குதலும் தோன்ற நின்றது.

1223. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்

துன்பம் வளர வரும்

என்பது

இந்த மாலைப் பொழுது, காதலர் என்னுடனே கூடியிருக்கிற நாளெல்லாம், எனக்குப் பயந்து வந்தது; இப்போது காதலர் பிரிந்த படியினாலே, பயப்படாமல் என்னைக் கொல்லுவதாகிய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டு வருகின்றது என்றவாறு.

1224. காதல ரில்வழி மாலை கொலைக்களத்

தேதிலர் போல வரும்

என்பது

காதலர் கூடியிருக்கிற போதெல்லாம் என் உயிர் தழைக்க வந்த மாலைப்பொழுது அவர் இல்லாத போது கொல்லுகிற கொலைக்களத்திலே கொலைஞர் வருமாறுபோல் வாரா நின்றது என்றவாறு.