பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

திருக்குறள்

நிணத்தை நெருப்பிலே போட்டால் அது உருகுகிறதுபோலத் தம் காதலரைக் கண்டவுடனே நிறை அழிந்து உருகும் நெஞ்சினையுடைய ஸ்திரீகளுக்கு, நம் நாயகனுடனே பிணங்கி இருப்போ மென்கிறது உண்டாமோ? ஆகாது என்றவாறு.

யான் அத்தன்மையே னாகலின் எனக்கு அஃது இல்லை என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉயசாக்குக்குறள் சநஉளசாய

இப்பால் 127. அவர்வயின் விதும்பல்

என்பது, தலைமகனும் தலைமகளும் பிரிந்தபோத ஒரு வரையொருவர் காணவேண்டி ஆசையினாலே விசனப்படுகிறதைச்[1] சொல்லுகிறதாம்.

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்

என்பது, தலைமகள் தலைமகனைக் காணவேண்டி விசாரத் தினால்[2] சொல்லியது:

அவர் நம்மைப் பிரிந்து போன நாள்களைச் சுவரிலே கிழித்து வைத்து, அவற்றைத் தொட்டு எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்து போயின; அதுவு மல்லாமல் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களும் பிரகாசம் மறைந்து போயின; இப்படியாகியும் அவர் வரவில்லை யென்றவாறு.

1262. இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்

கலங்கழியும் காரிகை நீத்து

என்பது[3]

விளங்கா நின்ற இழையினையுடையாய் ! காதலரை இன்று மறப்பேனாயின், தோள்வளைகள் கழன்றுபோம் என்றவாறு.
  1. காண்டற்கு விரைதல்
  2. விதுப்பினால் - பரிமேலழகர்
  3. இங்கிருந்து குறள் 1267 வரை பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு இல்லை