பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

திருக்குறள்

பிணக்கின்பமாம் என்றவாறு. அவ்விரண்டின்பமும் யான் பெற்றே னென்பதாம்.

ஆக அதிகாரம் ள௩டயக க்குக்குறள் சந௩ள௩௰

ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவி என நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை படர்மெலிந் திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும், விதுப்பு அவர் வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டு கொள்க. அஃதேல் வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாராலெனின், அஃது அறம்பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்று பற்றிய பிரிவன்மையானும், முனிவராணையான் ஒருகாலத்து ஒரு குற்றத்து ளாவதல்லது உலகியல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டதென்க.