பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



552

திருக்குறள்

ஞானாவரணீயம் : உயிரின் இயற்கையான அறிவை விளங்க வொட்டாமல் மறைப்பது (ஆவரணீயம் - மறைத்தல்).

தரிசனாவரணீயம் : உயிரின் இயற்கையான தரிசனத்தை விளங்க வொட்டாமல் மறைப்பது.

மோஹனீயம் : கட்குடியனைக் கள் மயக்குவது போல உயிரைமயங்கச் செய்வது.

அந்தராயம் : தானம் லாபம் முதலியவற்றைப் பெறவொட் டாமல் தடுப்பது.

வேதனீயம் : உயிருக்கு இன்பதுன்பங்களை உண்டு பண்ணுவது.

ஆயுஷ்யம் : காலிற் பூட்டிய இரும்புத்தலை போல உயிரை நாற்கதிகளிலும் தங்கிச் சுழலச் செய்வது.

நாமம் : ஒர் ஓவியன் பல சித்திரம் வரைவது போல, உயிருக்கு உடல் முதலிய அவயவங்களை அமையச் செய்வது.

கோத்திரம் : சிறிதும் பெரிதும் ஆகிய பாண்டங்களைச் செய்யும் குயவனைப் போல, உயிரைத் தூய உச்ச நீச குலங்களிற் பிறக்கச் செய்வது.

ஆன்ம குணத்தைக் கெடுப்பது காதி வினையே யாகும்.

ஞானாவரணீயம் கெட்டதனால் க்ஷாயிக ஞானத்தையும், தரிசனாவரணீயம் கெட்டதனால் க்ஷாயிக தரிசனத்தையும், மோஹனீயம் கெட்டதனால் க்ஷாயிக சம்யக்த்வத் தினையும்,

க்ஷாயிக சாரித்திரத்தினையும்,

அந்த ராயம் கெட்டதினால், க்ஷாயிக தானம், க்ஷாயிக லாபம், க்ஷாயிக போகம், க்ஷாயிக உபபோகம், க்ஷாயிக வீரியமும், அடைந்து பகவான் தன்மை பெறுதல் முறைமை (க்ஷாயிக ஞானம் - கேவல ஞானம் - கடையிலா ஞானம் - அனந்தஞானம்) (கிரியாகலாபம். பக்கம் 37 39 காண்க) (ஆகமஞானமலர் – சுவடி 4, பாடம் 5 காண்க)