பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 of திருக்குறள் 4. அறன் வலியுறுத்தல் என்பது, மகா முனிசுவரர்களாலே சொல்லப்பட்டதாய் இம்மையிலே கீர்த்தியும் மறுமையிலே மோட்சமுங் கொடுக்கப் பட்ட தர்மத்தின் நன்மையைச் சொல்லுகிறது. 3 1. சிறப்பினுஞ் செல்வமு மீனு மறத்தி னு உங் காக்க மெவனோ வுயிர்க்கு என்பது இம்மையிலே கீர்த்தியையுஞ் செல்வத்தையுங் கொடுத்து மறுமையிலே மோட்சத்தையுங் கொடுக்கிறது தர்மமானபடியி னாலே அந்தத் தர்மத்தைப் பார்க்கிலு மதிகமான பொருளிந்த வுலகத்திலே யில்லை யென்றவாறு. 32. அறத்தினு உங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னு உங்கில்லை கேடு என்பது ஒருவற்குத் தர்மத்தைச் செய்கிறத்தைப் பார்க்கிலு மதிகமான செல்வமு மில்லை; தர்பத்தைச் செய்யாமலிருக்கிறத்தைப்" பார்க்கிலுங் கேடு வேறே யில்லை; தர்மஞ் செய்யாவிட்டால் கெட்டுப்போவார்க ளென்றவாறு. 보 33. ஒல்லும் வகையா லறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் என்பது தனக்கியன்ற மாத்திரம் மேலான தர்மத்தை விடாதே" செய்யவேணு மென்பதாம்; தர்மத்தைச் செய்யாதவனுக்கு ஒரு பிரயோசனமுமில்லை யென்றவாறு. АН 34. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர்மை" பிற என்பது 1 கொடுக்கும் 1. செய்கிறதை 2. இருக்கிறதை 3 எல்லாம் என்பது அச்சு நூல் 4. 'செல்லும்வாய்' என்பதற்கு உரையில்லை 5. நீர என்பது பிறர் பாடம்