பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருக்குறள் வார்த்தை சொல்லுகிறவனுக்கு இம்மையிலே கீர்த் தியையு மறுமையிலே வெகுவான சுகத்தையுங் கொடுக்கு மென்ற வாறு. تلے | 99. இன்சொ லிணிதீன்றல் காண்பா னெ வன்கொலோ வன்சொல் வழங்கு வது என்பது பிறர் சொல்லுகிற நல்ல வார்த்தை தனக்கு நன்மையைக் கொடுக்க அனுபவித்தறிந்தவன் அந்த நல்ல வார்த்தையைத் தானுஞ் சொல்லாமற் பிறரிடத்திலே பொல்லாத வார்த்தை யைச் சொல்லுகிறது என்ன பலன் பெற வேண்டியோ? பொல்லாத வார்த்தை பிறருக்கும் பொல்லாது தனக்கும் பொல்லாது ஆன படியினாலே அந்தப் பொல்லாத வார்த்தை யைச் சொல்ல லாகா தென்றவாறு அர் 100. இனிய வுளவாக வின்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பது தர்மத்தை யுண்டாக்கப்பட்ட நல்ல வசனங்கள் தனக்குண்டா யிருக்க அதனைச் சொல்லாமல் பாவத்தை வரப்பட்ட இன் னாத வசனங்களை ஒருவன் சொல்லுகிறது எப்படிப்போலே யென்றால், நெல்லிக்காய்" தன்கையிலே யிருக்க அத்தைத்' தின்னாமல் எட்டிக்காயைத் தின்றாற் போலுமென்றவாறு. எட்டிக்காய் தின்றவன் பிராணன் இழந்தாற் பொல்லாத வார்த்தைகளைச் சொல்லுகிறவனும் தனக்குத்தானே கேடு தேடிக் கொள்ளுகிறதென்றவாறு. _ ஆக அதிகாரம் ய; குறள் ள. 1. நிதியை என்பது அச்சுநூல்: ‘'நீதி-உலகத்தோடு பொருந்துதல்-பரி மேலழகருரை 1. உண்டாக்கி 2 . அவற்றைச் 3 தரும் 4. 'இழந்தாற்போல' 5. கனி 6. அதனை