பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 87 இப்பால் 11 செய்நன்றி'யறிதல் என்பது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமல்’ இல்லறம் வழுவாமல் நடந்து நல்லவசனங்களைச் சொல்லுவாற் குச் செய்த நன்றியை மறவாம லிருக்க வேணும். 101. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது என்பது தனக்குமுன்னே ஒருவன் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறருக் குச் செய்த வுதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகமுங் கொடுத்தா லுஞ் சரியொவ்வாதென்றவாறு, செய்யாமற் செய்த வுதவிக்கு என்றது செய்தவுபகாரத்துக்கு மப்படிச் செய்ய மாட்டாதாருக்குச் செய்த தென்பதாம்’ தி 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒருவனுக்கு இடையூறு வந்த காலத்திலே ஒருவன் செய்த வுதவி கொஞ்சமா யிருந்தாலும் அந்தக் காலத்தைப் பார்த்தால் அது பூலோகத்தினும் பெரிதென்றவாறு அந்தக் காலத்தைப் பார்க்கிற தல்லது பொருளைப் பார்க்க வேண்டாமென்பது. JFi_ 103. பயன்துக்கார் செய்த வுதவி நயன்றுக்கி னன்மை கடலிறிற் பெரிது என்பது ஒருவன் தனக்குப் பிறகு செய்யப் போற வுபகாரத்தை யாரா யாதே அவனுக்குச் செய்த வுபகாரத்தை யாராய்ந்து பார்த் தால் அந்த நன்மை கடலினும் பெரியதா மென்றவாறு. P 1 : 'செய்ந்நன்றி' என்றிருத்தல் தகும் 2, மறவாமை. 3, பிற் சேர்க்கை குறிப்புரை காண்க