பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 9 I 114. தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தால் காணப் படும். என்பது இவர் சருமம் உடையவர் இவர் தரும மில்லாதவர் என்கிற விசேஷம் அவரவர்களுடைய பிள்ளைகள் நன்மையாலும் தீமை யாலும் அறியப்படும் என்றவாறு. தர்மத்தை யுடையவர்களுக்கு நல்லபிள்ளை யுண்டாகிறதும் தர்மமில்லாதவர்களுக்கு நல்லபிள்ளை இல்லையாகிறதும் ஆம்: இரண்டு திறத்தவரையும் அறிகிறதற்கு இதுவே அடையாள LLIT LD - அெ 115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி என்பது தீவினை செய்தவன் கெடுக்கிறதும் நல்வினை செய்தவன் பெருக்க வாழ்கிறதும் முன்னேதானே யுண்டாயிருக்குது அப்படி யறிந்து மனதிலே கேடு நினையாம லிருக்கிறதே அறிவுடைய வர்களுக்கு ஆபரணமா மென்றவாறு * டு 116. கெடுவல்யா னென்பதறிகதன் னெஞ்சம் நடுவொரீ’ யல்ல செயின் என்பது ஒருவன் தன்னெஞ்சம் நடுவு நிற்றலை யொழிந்து தர்ம மல்லாத காரியத்தைச் செய்ய நினைக்குமாயினந்த நினைவு தன்னைக் கெடுக்கத்தக்கதாக வந்த தென்றறிய வேணும் என்றவாறு நினைத்தாலும் செய்தாற்போ லென்றவாறு. 3FF 117. கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு என்பது 1. யிருக்கின்றன. 2. வொரீஇ என்றிருத்தல் வேண்டும்.