பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சண்முகசுந்தரம் 97, பஜனை கோயில் தெரு, சூளைமேடு, சென்னை-600 094. திருக்குறளாரைப் பற்றிய சில வார்த்தைகள் திருக்குறளார் தமக்குவமையில்லாததொரு தமிழறிஞர். ஒருவர் மேடைப்பேச்சாளர்களைப் போலவே அவர்களுடைய குரலிலேயே பேசிவிடலாம். ஆனால் திருக்குறளாரைப் போல் கதைச் சொல்லி முகபாவத்தைக் காட்டி அவையோ ரைக் குலுங்ககுலுங்கச் சிரிக்கவைக்க எந்த நகைச்சுவை நடிகராலும் முடியாது என்பது மிகையாகாது. திருக்குறளார் ஒரு குறட்பாவில் உள்ள அருஞ்சொற் களைத் திருவள்ளுவர் எந்தெந்த குறட்பாவில் கூறியுள்ளார் என்பதை எடுத்துக் கூறிப் பொருள் விளக்கம் தரும் ஆற்றல் மற்றவரிடம் காண்ப தரிது. திருக்குறளார் தமக்கே யுரிய பாணியில் இந்நூலே இயற்றியுள்ளார். முதற்கண் காமத்துப்பாவின் ஒவ்வொரு பாவுக்கும் விளுக்களைக் கூறியுள்ளார். அவ்வினுக்களிலேயே விடைகளும் அடங்கியுள்ளன. பிறகு ஒவ்வொரு குறட்பாவையும் கூறி அதற்குரிய விளுக்களுக்கு விடையாக விளக்கவுரை கூறியுள்ளார். அப்பால் தலைவன் தலைவியைக் குறித்துச் சொன்ன சொற்களையும், தலைவி தலைவனைக் குறித்துச் சொன்ன சொற் களையும் பட்டியல் போட்டுத் தந்துள்ளார். இவைகளை மனப் பாடஞ் செய்துவிட்டால் சங்கப் புலவர்கள் பாடிய அகப் பாக்களைப் படிப்பது எளிமையாகிவிடும். ஏனென்ருல் திருவள்ளுவர் தலைவனேயும் தலைவியையும் குறித்துச் சொன்ன சொற்களையும் கருத்துக்களையும் சங் ப் புலவர் களும் கூறியுள்ளார்கள். .