பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அதற்கு வருகின்ற துன்பம் தொடர்ந்து வளர்ந்து மிகுந்து வருவதாகின்றது. 4. (கொலைக்களத்திற்கு வருதல்.) காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். [1224] காதலர் இருந்தபோதெல்லாம் மனமகிழ்ச்சியை உண் டாக்கிய இந்த மாலைப்பொழுது காதலர் இல்லாத இப் பொழுது கொலை செய்கின்ற கொலைக்களத்தில் இருப்ப வர்கள் போல என் உயிரைக் கொண்டு செல்ல வருகின்றது. 5. காலை நேரமும் மாலைப் பொழுதும்.) காஜலக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை . . [1225յ காலைப் பொழுதிற்கு என்னலே செய்யப்பட்ட உபகாரம் டநன்மை யாது? (அது எனக்குத் துன்பம் செய்வதில்லே) நான் மாலைப் பொழுதிற்குச் செய்த தீமை யாது? ஒன்று மில்லையே! (மாலைப் பொழுது துன்பம் செய்கிறது.) 6. (அந்த நாளில் அறிந்தேனில்லை.) மாலைநோய் செய்தல் மனந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். [1226) மாலை நேரம் இப்போது பகையாகி எனக்குத் துன்பம் செய்வதை என்னுடைய நாயகர் என்னே விட்டுப் பிரிவதற்கு முன்பே அறிந்துகொண்டேனில்லை. 7, (மாலைப்பொழுதில் இந்நிலை அடையக் காரணம்.) காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய். [1227յ