பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&5 இக்காம நோயாகிய மலர் காலை நேரத்தில் அரும்பாகி பகலெல்லாம் பெரிய அரும்பாய் (போதாகி) முதிர்ந்து மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகின்றது. 8. (ஆயன் குழல்.) அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் ." குழல்போலும் கொல்லும் படை. - [12281 முன்பெல்லாம் இன்பம் செய்த ஆயனது குழலோசை இப்போது நெருப்பினைப் போல சுடுவதாகின்றது. அத் துடன், மாலைப் பொழுதிற்குத் தூதும் ஆகி, அந்த மாலை வந்து கொல்லும்போது கொலை செய்யும் படையுமாய் அமைந்தது. 9. (மாலைப் பொழுதும் மகளிரும்.) பதிமருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு மாலை படர்தரும் போழ் து. [12291 கண்டவர்களெல்லாம் மதி மருளும்-மயக்கமுறும் வகை யில் இந்த மாலைக்காலம் வரும்போது இவ்வூரெல்லாம் மயங்கி நோயினை அனுபவிப்பதாகும். (முன்பெல்லாம் அவள் மட்டும் மயங்கி இருந்தாள்.) . . . . . 10. (பிரிவுத் துன்பத்தின் உச்சம்.) பொருண் மாவை யாளரை உள்ளி மருள் மாலை மாயும்என் மாயா உயிர், - [1230] நாயகர் பிரிவினைப் பொறுத்து இறக்காமல் இருந்த என் உயிரானது, பொருள் தேடுவதையே குறியாகக் கொண்ட என்னுடைய நாயகரை நினைந்து, மயங்குகின்ற இந்த மாலை நேரத்திலே மாய்கின்றது. -