பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&台 124. உறுப்பு நலன் அழிதல் 1. (கண்கள் அழகிழந்தன.) சிறுமை நமக்கொழியச் சேண்சென்ருர் உள்ளி நறுமலர் நாணின கண், [1231] பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை நம் மிடத்திலே இருக்க தொலைதுாரத்திலே சென்றிருக்கும் காத வரை நினைத்து அழுவதால் கண்கள் ஒளியிழந்து, முன்னே தம்மைக் கண்டு நாணமுற்ற மலர்கட்கு இப்போது கண்கள் நாணிவிட்டனவாகும். 2. (கண்களின் நிலைமை.) நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் ப சந்து பணிவாரும் கண். [1232) அழகிய நிறம் வேறுபட்டு நீரைச் சொரிந்துகொண்டிருக் கின்ற கண்கள் தம்முடைய காதலர் அன்பு செய்யாதிருக்கும் தன்மையினைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவன போலிருக் கின்றன. 3. (காதலியின் தோள்கள் நிலைமை.1 தணந்தமை சால அறிவிப்பு போலும் மணந்தநாள் வீங்கிய தோள். {1233. திருமணமானபோது மகிழ்ச்சிப் பெருக்கால் நாயகியின் தோள்கள் பூரித்துக் காட்சியளித்தன. இப்போது நாயக னைப் பிரிந்திருக்கின்ருள். வருத்தம் மிகுந்ததினல் உடம்பு மெலிந்து அவளுடைய தோள்களும் மெலிந்து பிரிந்திருக்கும் நிலைமையினை உணர்த்துகின்றன. 4. வாடிய தோள்கள்.) பணநீங்கிப் பைந்தொடி சோரும் துணநீங்கித் - தொல்கவின் வாடிய தோள். [1234]