பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 என்னுடைய துணைவர் பிரிவால் நீங்கியதால் அவரால் எனக்கு உண்டான செயற்கை அழகு மாத்திரமே யல்லாமல் பழைய இயற்கை அழகினையும் இந்தத் தோள்கள் இழந்து விட்டன. அதற்கும் மேலாக தம்முடைய பெருமை யிழந்து பசும்பொன்னலான வளையல்களும் கழலுகின்றன. 5. (கொடியவர் கொடுமை உரைக்கும்.) கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். [1235] பிரிந்து இன்னும் வாரா திருக்கின்ற கொடியவரான காதலரின் கொடுமையான செயலினைப் பலரறிய சொல்லு கின்றன; எவையென்ருல், தோள் வளையல்களும் கழன்று பழைய இயற்கை யழகினையும் இழந்த இத்தோள்கள். என்பதாகும் . 6. (தோள் வளையல்களும் தோளும்.) தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து . [1236յ தோள் வளையல்கள் கழலுமாறு தோள்கள் மெலிந்து வாடவும், அவற்றைக் கண்டதினல் நாயகரைக் கொடியவர் என்று சொல்லுகின்றனர். அதனைத் தாங்க முடியாமல் என்னுள்ளே நொந்துகொள்ளுகின்றேன். 7, Iமனத்தைப் பார்த்து அவள் பேசியது.1 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து. [1237] நெஞ்சமே! கொடியவராகிய என்னுடைய காதலர்க்கு என்னுடைய வாடுகின்ற தோள்களினல் உண்டாகின்ற