பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆரவாரத்தினை எடுத்துக் கூறி ஒரு மேம்பாட்டினை-பெருஞ் சிறப்பினை அடையமாட்டாயோ? 8. (நாயகன் தன்னுள்ளே சொன்னது.) முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை துதல். [1238] தன்னை (காதலியை) இறுகத் தழுவிக்கொண்டிருந்த கைகளை ஒருநாள் தளர்த்தினேன். அதனைத் தாங்கமுடியா மல் பசுமையான வளையல்களே அணிந்த இப்பேதைப்பெண் ணினது நெற்றியான்து நிறம் வேறுபட்டது. (இந்தப் பிரி வில்ை எப்படி இருக்குமோ!) 9. (கண்ணும் பசப்பு நிறமும்.1 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் . [1239] தழுவிய கைகளைத் தளர்த்தலால் அப்புணர்ச்சிக்கு இடையே சிறு காற்று நுழைந்தது. அந்த இடைவெளியைப் பொருமல் பேதைப் பெண்ணுகிய என்னுடைய காதலியின் பெரிய குளிர்ச்சியான கண்கள் பசலை நிறம் அடைந்தன. (அத்தகைய காதலியைக் குறித்துக் காதலன் பேசினன்.) 10. (நெற்றியில் உண்டானதைக் கண்ட கண்கள்.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. [1240] சிறு காற்று நுழைந்ததால் கண்களின் பசப்புத்தன்மை துன்பம் அடைந்தது. இவ்வாறு துன்பம் அடைந்ததற்குக் காரணம், தனக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய நெற்றியால் உண்டாக்கப்பட்ட பசப்பினைக் கண்டு என்ப தாகும்.