பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125. நெஞ்சொடு கிளத்தல் 1. (நாயகி தன் ஆற்ருமை கூறியவாறு.1 நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து, [1241] நெஞ்சமே எந்த வகையாலும் தீர்க்கமுடியாத இந்தக் காமநோயினைத் தீர்க்கக்கூடிய மருந்தொன்றினை எனக்கு எப்படியாவது அறிந்து சொல்லமாட்டாயோ? 2. (காதலனைக் காணும் வேட்கை.) காதல் அவர் இல் ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. . [1242.] என்னுடைய மனமே! நீ வாழ்வாயாக! நாயகர் என் மீது ஆசையில்லாதவராக இருக்கின்ருர். (இருந்திருந்தால் வந்திருப்பார்) அப்படியிருக்க அவருடைய வருகையினைப் பார்த்து நீ வருத்தப்படுவதற்குக் காரணம் உன்னுடைய அறியாத் தன்மையே தவிர வேறில்லை. 3. (நோய் உண்டாக்கியவரிடம் @మడి).) இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல், [1243] நெஞ்சமே! நாயகரிடத்தும் போகாமல் இங்கேயே பிரிவால் இறந்திடாமலும் இருந்து அவர் வருகையினை எண்ணி வருந்துவது ஏனே? இந்தத் துன்பத்தினை நமக்குச் செய்த நாயகருக்கு நம்மீது இரக்கப்பட்டு வருகின்ற நினைப்பு உண்டாகாது. 4. (கண்கள் தின்னுகின்றன.) கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவை என்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. [1244]