பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 Ü நெஞ்சமே! நீ நாயகரிடத்தில் செல்லுவாயானல் இந்தக் கண்களையும் உன்னுடன் கொண்டுசெல்லுவாயாக; அவரை ச் காட்டு' என்று-அவரைக் காண விரும்பி-என்னைத் தின்னு வது போன்று இக்கண்கள் துன்பம் தந்துகொண்டிருக் கின்றன. 5. (கைவிடுதல் இயலுமோ?! செற்ருர் எனக்கை விடல் உண்டோ நெஞ்சேயாம் உற்ருல் உருஅ தவர். [1245] நெஞ்சமே! நாம் காதலரை விரும்பி நேசித்திருக்க நம் மீது காதல் விருப்பம்கொண்டிருந்த நாயகரை, நம்மை வெறுத்துவிட்டார் என்று நினைத்து கோபித்துக்கொண்டு கைவிட்டிருக்கும் நிலை நமக்கு உண்டாகுமோ? 6. (நெஞ்சைப் பார்த்து அவள் சினந்துகொண்டது.) கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய் பொய்க்காய்வு காய்தி.என் நெஞ்சு. [1246] என்னுடைய மனமே! நாம் பிணங்கிக்கொண்டால் நம்முடன் புணர்ந்து அப்பிணக்கினை நீக்கவல்ல நாயகரைப் பார்த்தால் பொய்யாகவேனும் அவருடன் பிணங்கிக் கொண்டு பிறகு நீங்கமாட்டாய்; அப்படியும் செய்யமுடி யாத நீ அவரைக் கொடியவரென்று பொய்யாகப் பிணங்கிக் கொண்டிருக்கின்ருய்; 7. (நாணம் அவரிடம் செல்ல தடுக்கிறது.) காமம் விடுஒன்ருே நாண்விடு நல்நெஞ்சே யானே பொறேன்.இவ் இரண்டு. [1247] நல்ல என் மனமே! ஒன்று காமவிருப்பத்தினையாவது விட்டுவிடுவாயாக; காம ஆசையினை விடமாட்டாயாகில் நாணத்தினையாவது விட்டுவிடு: இல்லாவிட்டால் இந்த