பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 இரண்டினையும் ஒன்ருக இருக்க நான் தாங்கமாட்டேன். (நாயகி பேசியது.) 8. (நெஞ்சினுடைய பேதைமை.1 பரிந்தவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. [12481 என்னுடைய மனமே! நாயகர் நம்முடைய வேதனையை அறியாமையால் வருந்தி நம்மிடம் வந்து அன்பு காட்டமாட் டார் என்று எண்ணி நம்மைப் பிரிந்துபோயிருக்கின்ற நாயகர் பின்னே துன்பத்துடன் ஏங்கி போகின்ருய்;. நீ ஒன்று மறியாத பேதை: 9. (காதலர் இருக்கின்ற இடம்.) உள்ளத்தார் காத லவராக உள்ளி நீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு. [1249] என்னுடைய நெஞ்சமே! நம்முடைய காதலர் உள்ளத்தி லேயே இருந்துகொண்டிருக்கின் ருர். அப்படியிருக்க, நீ இப் போது வெளியே தேடிக்கொண்டு யாரிடத்திற்குப் போகின் ரு ய்? 10. (மறந்திருக்கவே முடியாது.) துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். [1250] நம்மைச் சேர்ந்திருக்காத - நம்மைத் துறந்து போன காதலரை நம்முடைய மனத்திலேயே நினைத்துக்கொண்டு இருப்போமாக, முன்னர் இருந்த புற அழகேயன்றி இன்ன மும் அகத்து அழகையும்-நிறைகுணத்தினையும்-இழந்து விடுவோம். -