பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 125 நிறை அழிதல் 1. (நாணமும் நிறைகுணமும் அழிகின்றன.) காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நானுத்தாள் வீழ்த்த கதவு. [1251] நாணம் என்கின்ற தாழ்ப்பாள் போடப்பட்ட நிறை யென்று சொல்லப்படுகின்ற கதவினைக் காமவேட்கை என் கின்ற குந்தாலி (உலக்கை) முறிக்கின்றது. 2. (காமம் எனப்படும் ஒன்று.1 காமம் என ஒன்ருே கண்ணின்று என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். [1252] நள்ளிரவிலேயும் இந்தக் காமம் என்னுடைய மனத்தினை தொழிலிலே ஆட்சி செய்துவருகின்றது. ஆதலால் காமம் என்ற ஒன்று இரக்கமில்லாததாக இருக்கின்றது. அந்தோ!" 3. (மகளிர் காமம் மறைப்ப தொன்றன்று.) மறைப்பேன்மன் காமத்தை யானே குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றி விடும், [1253] இந்தக் காமநோயினை நான், அந்தோ! என்னுள்ளத்தி னுள்ளே மறைக்க நினைக்கின்றேன். அதனல், இது என் னுடைய எண்ணப்படி இருக்காமல் தும்மலைப் போலத் தோன்றி வெளிப்பட்டு விடுகின்றது. 4. பலரும் அறிய வெளிப்படுகின்றது.) நிறையுடையேன் என்பேன்மன் யாைேஎன் காமம் மறை இறந்து மன்று படும். 11254] நான் நிறைகுணம் உடையவள் என்று, ஐயோ, நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனல் என்னுடைய இந்தக்