பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 காமம் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலரும் அறிய வெளிப்பட்டுவிடுகின்றது. 5・ (பெருந்தகைமை கிடையாது.) செற்ருர்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்ருர் அறிவதொன்று அன்று. [1255] தம்மை விட்டுப்போன நாயகர் பின்னே செல்லாமல் தாமும் நீங்கி நிற்கிற பெருந்தன்மையான நிறையுடை மைக் குணம் காம நோயினே அடைந்தவரால் அறியப்படுவ தொன்று அல்ல என்பதாகும். 6. (காமநோய் வந்த காரணம்.) செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்று என்னை உற்ற துயர். II 256.] தம்மை விட்டு நீங்கிச் சென்ற காதலர் பின்னே நான் செல்லவேண்டி இருப்பதால் என்னேயடைந்த இந்தக் காமத் துன்பமானது எத்தன்மையானது? மிகவும் நல்லதென்ப தாகும். அவர் இருக்குமிடம் செல்லத் துTண்டியதாகும். 7. (காதலரிடம் பிணங்காமைக்குக் காரணம் கூறினுள்.) நாண் என ஒன்ருே அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். [1257յ நம்மால் விரும்பப்பட்ட காதலர் வந்து, காம இன்பத் தில் விரும்பியவைகளைச் செய்கின்ருர், ஆதலால் அந்த நேரத்தில் நாணம் என்று சொல்லப்பட்ட ஒன்று உண்டு என்பதையே அறியமுடியாதவரானேம். 8. (உடைக்கும் படை.) பன்மாயக் கள்வன் பணிமொழி அன்ருேநம் பெண்மை உடைக்கும் படை. [1258]