பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi; இறையனர் அகப்பொருள் இலக்கணத்தில் காண்பது போலவே திருக்குறளில் களவியல், கற்பியல் என்ற இரண்டு இயல்களைக் காண் கிருேம். அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது அந்தனர் அருமறை மன்றல் எட்டினுள் கந்தருவ வழக்கம் என் மஞர் புலவர் அதுவே தானே அவளே தமியர் கானக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல் -இறையனர் அகப்பொருள் இலக்கணம் சூத்திரம் 1-2. தலைவனும் தலைவியும் தனியிடத்தில் ஒருவரையொருவர் கண்டு மனம் ஒத்து காதல்கொண்டு காந்தர்வ மணம் புரிதல் களவொழுக்கம் எனப்படும். இதனைத்தான் திருவள்ளுவர் களவியலில் ஏழு அதிகாரங்களில் கூறுகிருர் . தலைவன் தலைவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு என்று தனக்குள் சொல்லிக்கொண்டதாகத் திருவள்ளுவர் காமத்துப்பாலின் முதற்பாட்டை இயற்றினர். நோக்கிள்ை நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்னது உடைத்து. என்று இரண்டாவது குறளைப் பாடினர். அப்படித் தலைவி தன்னை விரும்புவதை அறிந்து தலைவன். இவளேச் சொல்லாடிக் காண்பேன்’ என்று தனக் குள் சொல்லிக்கொண்டு, நல்லாய் கேள்! துனங்கமைத் திரளென நுண்ணிழை யணேயென முழங்குநீர்ப் புனையென அமைந்ததின் தடமென்ருேள் வணங்கிறை வாலெயிற் றந்தல்லாய் நிற்கண் டார்க்கு அணங்காகும் என்பதை அறிதியோ அறியாயோ? என்று கேட்டதாகக் கபிலர் பாடினர், ( லித்தொகை 3 !