பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நமக்கு (பெண்களுக்கு) நிறைகுணம் என்பது பாதுகாப் பாக உள்ளது. அதனை உடைத்து அழிக்கின்ற படை என்ன வென்ருல், பல பொய்களைப் பேசுவதில் வல்லவராகிய கள்வனுடைய (நாயகருடைய) பணிவுடைய சொற்கள் அல்லவா? 9. (பிணங்கிக்கொள்ள இயலவில்லை.) புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. [1259] பிணங்கிக்கொள்ள வேண்டுமென்று நினைத்து சென் றேன். அப்படிப் போனுலும் என்னுடைய மனமானது அவ ருடன் (நாயகருடன்) சேர்ந்து கலத்தலைத் தொடங்கிவிட்ட தைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டேன். 10. (தீயிலிட்ட நிணம்.) நினம்தியில் இட்டன்ன நெஞ்சிஞர்க்கு உண்டோ புணர்ந்து ஊடி நிற்பேம் எனல். [1260յ நிணத்தினை (கொழுப்பு) நெருப்பில் போட்டால் அது உருகுவதைப் போல நாயகரைக் கண்டால் நிறையழிந்து உருகுகின்ற நெஞ்சினையுடைய மகளிர்க்குப் பிணங்கிக் கொண்டு அதன்பின் புணர்ந்து இருப்போம் என்று நினைப் பது உண்டாகுமோ? 127. அவர்வயின் விதும்பல் 1. (காணவேண்டிய வேட்கையில்ை அவள் சொல்லியது.) வான் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல். [1261յ என்னுடைய விரல்கள் எம் காதலர் பிரிந்து போன நாட்களைச் சுவரிலே குறிவைத்துத் தொட்டு எண்ணி