பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 எண்ணிப் பார்ப்பதனுலே தேய்ந்து போயின; அதுமட்டுமல் லாமல் என்னுடைய கண்களும் அவர் வருகின்ற வழி பார்த் துப் பார்த்து ஒளியிழந்து புன்மைத் தன்மை அடைந்தன. 2. (காதலரை மறந்திருப்பதே இயலாது.) இலங்கிழாய் இன்று மறப்பின் என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. [1262] ஒளிவிடுகின்ற அணிகலன்களை உடையவளே! இன்றைய நாளில் நாயகரை மறப்பேயிைன் மேலும் என்னுடைய அழகானது விட்டு நீங்க, என்னுடைய தோள்கள் தோள் வளையல்கள் கழலப்பட்டனவாகும். 3. (உயிர் பிரியாதிருப்பது எதல்ை?) உரன் நசைஇ, உள்ளம் துணையாகச் சென்ருர் வரல் நசைஇ இன்னும் உளேன். I 1263] இன்பத்தினை விரும்பாமல் தமது வெற்றியினையே விரும்பி தம்முடைய மனவெழுச்சியே துணையாகப்போனவர் திரும்பி இங்கு வருதலையே விரும்பி இருப்பதால் இந்தத் துன்பநிலையிலும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். 4. (என்னுடைய மனம் பருத்து எழுகின்றது.1 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. I 1264] நம்மைப் பிரிந்துபோன நாயகர் காம இன்ப வேட்கை யினுல் நம்மிடம் வருவதை நினைப்பதால் என்னுடைய நெஞ்சமானது துன்பம் நீங்கி மேன்மேலும் பருத்து எழு கின்றது. 5. (பசப்பு நீங்கிவிடும்.) க்ாண்கமன் கொண்கனைக் கண்ணுரக் கண் டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. - [1265]