பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 என்னுடைய கண்கள் ஆரும் வகையில் என் நாயகரை காண்பே கை, அவ்வாறு கண்ட பிறகு என்னுடைய மென் மையான தோள்களிலுள்ள பசப்பு நிறம் தானே நீங்குவ தாகும். (நாயகி சொன்னது.) 6. (நாயகரைப் பருகுவன்!) வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. [1266յ வாராமல் பிரிந்திருந்த நாயகன் ஒருநாள் என்னிடம் வருவாராக வந்தால் துன்பம் செய்துகொண்டிருக்கின்ற இந்த நோயெல்லாம் நீங்க ஐம்பொறிகளாலும் இன்பத் தினை உண்பேன். 7. (கண்ணன்ன கணவர்.) புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். [1267յ கண்போன்று இனிய என்னுடைய நாயகர் வந்தால், காலங்கடந்து வந்ததற்காகப் பிணங்குவேனே? தாங்க முடியாத துன்பம் நீங்கத் தழுவுவேனே? இந்த இரண்டு செயல்களையும் கலப்பேனே? யாது செய்யக் கடவேன்? 8. அரசு வினைமுடித்து நாயகன் தலைமகளை நினைந்து கூறியது. - வினைகலந்து வென்றுஈக வேந்தன் மனகலந்து மாலை அயர்கம் விருந்து. [12681 நாட்டு மன்னன் போர்ச் செயலிலே வெற்றி பெறு வாகை, யாமும் திரும்பிப் போய் மனைவியைக் கூடி அங்கே மாலைப் பொழுதிற்கு விருந்து செய்யக் கடவேம், என்ப தாகும். -