பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 9. [ஒருநாள் பல நாட்களாகும்.) ஒருநாள் எழு நாள்போற் செல்லும்சேண் சென்ருர் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு. [1269] அயல் நாட்டிற்குச் சென்ற நம் காதலர் திரும்பி வரக் குறித்த நாளை மனதிற் கொண்டு ஏங்கி வருந்துகின்ற மகளிர்க்கு ஒரு நாளானது பல நாட்கள் போல நீண்ட தாகக் காட்டும். 10. (காதலன் நினைப்பு.) பெறின் என்ம்ை பெற்றக்கால் என்னும் உறின் என்னும் உள்ளம் உடைந்து உக்கக் கால். [1270] பிரிவுத்துன்பம் தாங்கமுடியாமல் நம் காதலி உள்ளம் உடைந்து இறந்த பிறகு நம்மை அவள் பெற்ருல்தான் யாது பயன்? பெறக் கடவளானல்தான் என்ன பயன்? அப்படிக்கின்றி மெய்சேர கலந்தால்தான் என்ன பயன்? இவை எதலுைம் பயனில்லை என்பதாகும். 128. குறிப்பு அறிவுறுத்தல் 1. (நாயகன் குறிப்பறிகின்றன்.) கரப்பினும் கை இகந்து ஒல்லா நின் உண்கண் உரைக்கல் உறுவதொன்று உண்டு. [12711 வெளியிட்டுச் சொல்லாமல் மறைத்தாயாயினும் அதற்கு உடன்படாமல் கைகடந்து உன்னுடைய மைதீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்லக் கூடியது ஒரு காரியம் இருப்பதாகின்றது. ”اسماعستستسسس۔--سلT--F 2. (பெண்மைத் தன்மை பெரிது.1 கண் நிறைந்த காரிகை காம்புஏர்தோள் பேதைக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது. II 272] தி-7