பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 என்னுடைய கண்ணிறைந்த அழகையும் மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடைய மாதுக்கு (நாயகிக்கு)ப் பொதுவாகப் பெண்பாலாரிடத்து இருக்கும் அறியாமைத் தன்மையினைக் காட்டிலும் மிசவும் பெரிதானதாக இருக் கின்றது. 3. (மணியும் நூலும் 1 மணியுள் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியுள் திகழ்வதொன்று உண்டு. சேர்க்கப்பட்ட மணிகளுக்குள்ளிருந்து புறத்தில் காணப் படுகின்ற நூலினப்போல இப்பெண்ணின் அழகுக்குள்ளி ருந்து புறத்தில் காணப்படுகின்ற குறிப்பொன்று இருப்ப தாகின்றது. . - [1273յ 4. (நகைப்பும் மணமும்.) முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளது.ஒன்று உண்டு. [1274] அரும்பினுடைய முகிழ்ப்பினுள் புறத்தில் தோன்ருத வாறு இருக்கின்ற நறுமணத்தினைப் போல, இப்பேதைப் பெண் என்னுடன் நகைக்கக் கருதுகிற நகைப்பினது முகிழ்ப்பில் உள்ளதாயும் வெளிப் புறத்தில் புலஞகாதது மான குறிப்பு ஒன்று இருக்கின்றது. 5. (மருந்தொன்று இருக்கின்றது. செறிதொடி செய்து இறந்த கள்ளம் உறுதுயர் . தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. [1275] நெருங்கிய வளையல்களையுடைய பெண்ணுனவள் என்னி டம் இல்லாத ஒன்றினை நினைந்து, அந்தக் காரணத்தினல் எனக்குத் தெரியாமல் மறைத்துப் போன குறிப்பு, என்னு டைய மிகுந்த துன்பத்தினைத் தீர்த்து நீக்கிவிடுகின்ற மருந் தொன்று உடையதாயிற்று. x -