பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 9 6. (நாயகனுடைய குறிப்பறிந்த நாயகி.) பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. [12761 நாயகர் வந்து பிரிவினலாய நமது துன்பத்தை மிகுதி யும் ஆற்றி நாம் மகிழ்ச்சியடையும் வண்ணம் கூடுகின்ற புணர்ச்சியானது பிறகும் அத்துன்பத்தினை அரிதாகப் பொறுத்திருந்து அவருடைய அன்பில்லாமையை நினைக்கும் தன்மை உடையதாக இருந்தது. 7. (முன்னமே அறிந்த வளையல்கள்.1 தண்ண ந் துறைவன் தணந்தமை நம்மினும் - முன்னம் உணர்ந்த வளே. [1277] குளிர்ந்த துறையை உடையவளுன நாயகன் உடம் பினல் கூடியிருந்து நம்மை மனத்தினல் பிரிந்த நிலைமை யினை அவனுடைய குறிப்பால் அறிதற்குரிய நம்மைக் காட்டிலும் என்னுடைய வளையல்கள் முன்னமேயே அறிந்து உணர்த்தினவாகும். 8. (மேனி, பல நாள் போல் பசந்தது.) நெருநற்றுச் சென்ருர்எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து. [1278յ எம்முடைய காதலர் நேற்றுதான் நம்மை விட்டுப் பிரிந்து சென்ருர். நாமும் அப்பிரிவுத் துன்பத்தினால் உடம்பு பசலை நிறமடைந்து பலநாட்கள் இருந்தது போலாயினோம். 9. (தோழி நாயகனிடம் கூறியது.1 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃது ஆண்டு அவள்செய் தது. - [1279]