பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தலைவியானவள் தோள் வளையல்களைப் பார்த்தாள். (மெலிவால் அவைகள் இருந்த விடத்தைவிட்டு இறங்கி விடும்.) தன்னுடைய மெல்லிய தோள்களைப் பார்த்தாள். (பிரிவுத் துன்பத்தால் அவைகள் மெலிந்துவிடும். பிறகு தன்னுடைய அடிகளைப் பார்த்தாள். (இந்த இரண்டும் நடவாமலிருக்க அவர்பின்னே செல்லுங்கள்) அந்த இடத்தில் அவள் செய்த குறிப்பு இவைகளே யாகும். 10. (தலைமகன் பிரியாமைக் குறிப்பு.) பெண்ணில்ை பெண்மை உடைத்துஎன்ப கண்ணில்ை காமநோய் சொல்லி இரவு. [1280յ பெண்கள் தங்கள் காமநோயினை வாயால் சொல்லாமல் கண்ணினுல் சொல்லி, அது தீர்த்தல் வேண்டி தம் பாதங் களைப் பார்த்து இரங்கிக் கேட்டு நடத்தல், தமக்கு இயல் பாகிய பெண்மைக் குணம் மேலும் ஒரு பெண்மைத் தன்மை யினையுடைய தென்று அறிந்தோர் சொல்லுவார்கள். 129. புணர்ச்சி விதம்பல் 1. களித்தலும் மகிழ்தலும்.1 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு. |1281]. நினைத்த மாத்திரத்திலேயே களிப்பு மிகுதலும் கண்ட மாத்திரத்திலே பெருமகிழ்ச்சி அடைவதும் கள்ளுண்டார்க்கு இல்லையாகும். காமம் உடையவர்கட்கு உண்டு என்ப தாகும். 2. (ஊடுதல் செய்யக்கூடாத நேரம்.) தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். [1282]