பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 I காம இன்ப வேட்கை பனையளவினும் மிகுதியாகப் பெண்களுக்கு உண்டாகிவிடுமாகில் தினையளவும் தம் முடைய காதலரோடு பிணங்காதிருத்தல் விரும்பப்படுவ தாகும். ஊடினல் வருத்தம் மிகும் என்று நாயகன் குறிப் பாக உணர்த்தினனுகும். 3. (கணவனைக் காணுதிருக்க முடியாத கண்கள். பேணுது பெட்பவே செய்யினும் கொண்க:னக் காணுது அமையல கண் . [1283յ நம்மை மதிக்காமல் தான் (நாயகன்) வேண்டுவன வற்றையே செய்தாலும் என்னுடைய கண்கள் கணவனைப் பாராமல் அமைந்து இருக்க முடியாதவைகளாகின்றன. 4. (ஊடலும் கூடலும்.) ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு. s 1284] தோழியே! நாயகன் இதுவரை வாராமல் இருந்த குற்றங்களைக் கருதி அவரிடம் பிணங்கிக்கொள்ள வேண்டும் என்று சென்றேன். அவரைக் கண்டவுடன் ஊடலை மறந்து என்னுடைய நெஞ்சம் அவருடன் கூடுதலிலே சென்று விட்டது. - . 5. (நாயகனும் எழுதுகோலும்.1 எழுதுங்கால் கோல்காணுக் கண்ணே போல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. [1285] கண்களுக்கு மையெழுதும்போது அந்தக் கோலினு டைய தன்மையினைக் காணமுடியாத கண்களைப்போல, என்னுடைய இன்ப நாயகரது குறை பாடுகளை அவரைக் கண்டபோது காணமுடியாதவளானேன். (அவர் இல்லாத போது குறைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாளாம்.)