பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 03 காம இன்பமானது மலரினையும்விட மென்மையான தாக இருக்கும். அந்தத் தன்மையினைப் புரிந்து அதன் கால மறிந்து பக்குவமாகப் பெற்றின்புறுவோர் உலகில் சிலரே யாவர். * , 10. (கலங்கிளுள் புல்லினுள்.1 கண்ணின் துணித்தே கலங்கிளுள் புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்று. . [1290] என்னுடைய காதலி கண்களினல் மட்டும் பிணங்கிக் கொண்டு புணர்ச்சி நிகழ்கின்றபோது என்னைக் காட்டிலும் தான் விரைவு காட்டிப் பிணக்கினை மறந்து அப்போதே கூடி விட்டாள். 130. நெஞ்சொடு புலத்தல் 1. (நெஞ்சைப் பார்த்து அவள் சொல்லியது.1 அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன்நெஞ்சே நீளமக்கு ஆகா தது. - [1291] என்னுடைய நெஞ்சமே! நாயகராகிய அவருடைய மனம் நம்மை நினைக்காமல் அவருக்காகவே இருந்துகொண் டிருப்பதைத் தெரிந்திருந்தும் நீயும் அவரையே நினைந்து எமக்காக இல்லாமலிருப்பது ஏனே? 2. (அவரிடமே செல்லுகின்ருய். உருஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செருஅர்எனச் சேறினன் நெஞ்சு. . [1292] நெஞ்சமே! நம்மிடம் வந்து அன்புகாட்டாத-அன்பில் லாத-நாயகரைத் தெரிந்து வைத்திருந்தும் நாம் சென்ருல், கோபித்துக்கொள்ளமாட்டார் என்ற காரணங் கண்டு அவ ரிடம் செல்லுகின்ருய்; இதுவும் உன்னுடைய அறியாமை என்பதாகும். -