பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii பட்ட பின்றை வரையாக் கிழவன் நெட்டிடை கழிந்து பொருள்வயின் பிரிதலும் பொருள்வயின் பிரியா தொருவழித் தணத்தலும் புரைவ தென்ய கற்பால் ஆன -இறையனர் அகப்பொருள் இலக்கணம் சூத்திரம் 25. களவொழுக்கத்தில் திளைத்த தலைவன் தலைவியைத் திருமணஞ்செய்துகொள்வதற்காகப் பொருள் சம்பாதிக்கப் பிரிந்துபோனலும், அவளே விட்டுப் பிரிந்துபோய் ஓரிடத்தில் தங்கியிருந்தாலும், தலைவி அவன் வருகையை எதிர்ப்பார்த் - திருப்பதால் அவள் கற்புடையவள் எனப்படுவாள். தலைவ னுடைய பிரிவுதான் தலைவியின் கற்பை அயலார்க்கு எடுத் துக் காட்டுகிறது. அதனுல்தான் திருவள்ளுவர் கற்பியலின் முதல் அதிகாரத்தில் பிரிவாற்ருமை கூறிஞர். செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. என்று கற்பியலின் முதற்பாட்டை இயற்றினர். தலைவன் பிரிந்தால் தலைவி உயிர் வாழமாட்டாள் என்றபடி, வாழ்தல் உயிர்க் கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள். நீங்கு மிடத்து. - குறள் 1124. நோங்கால் அளியல் தானே யாக்கைக்கு உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவரி யோளே. அகநானூறு 339: 11-14. திருக்குறளார் இயற்றிய திருக்குறள் காமத்துப்பால் நூலைப் படித்தால் சங்க இலக்கிய அகப்பாக்களின் சுவையை நுகர அவாவுண்டாகும் என்பது வெள்ளிடைமலை. க. சண்முகசுந்தரம்